திருப்பூர்: பல்லடம் அருகே மதுபோதையில் ஹான்ஸ் கேட்டதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 30-க்கும் மேற்பட்ட இரண்டு பிரிவினரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக விரட்டி விரட்டி தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கவுண்டம்பாளையம் சாலையில் மகாலட்சுமி நகர் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை ராயர்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் சிட்கோ தொழில்பேட்டை அருகில் 30-க்கும் மேற்பட்ட இரண்டு தரப்பினர் மதுக்கடையில் மது அருந்தியதாகவும் பின்னர், அருகே உள்ள மைதானத்திற்கு சென்று அமர்ந்திருந்தபோது ஒரு தரப்பை சேர்ந்த சிலர் மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்களிடம் ஹான்ஸ் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஹான்ஸ் தரமறுத்ததில் இரண்டு தரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. மேலும் 30-க்கும் மேற்பட்ட இரண்டு பிரிவினரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக விரட்டி விரட்டி தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த நபர் ஒருவர் தனது காரில் மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது அதி வேகமாகச் சென்று மோதி கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதில் இரண்டு தரப்பையும் சேர்ந்த ராயர் பாளையத்தை சேர்ந்த சங்கரலிங்கம், திண்டுக்கல் நத்தத்தை சேர்ந்த கண்ணன், ஜோலார்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் மண்டை உடைந்து உடல் முழுக்க பலத்த காயம் ஏற்பட்டது. இந்தநிலையில், காரில் மோதிவிட்டு அதனை ஓட்டி வந்த அவர் அங்கு இருந்து மாயமாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த இரு தரப்பினர் இடையேயான மோதல் சம்பவம் குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் டிஎஸ்பி வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

மேலும், காயமடைந்தவர்களை போலீஸார் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு அவர்களை கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த இருதரப்பு மோதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் காரை ஏற்றி கொல்ல முயன்ற அந்த நபர் யார் மாயமான கார் எங்கே என்பது குறித்தும் மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்தும் ராயர்பாளையம் மற்றும் சிப்கோ தொழில் பேட்டையை சேர்ந்த சிலரைப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்தில் கேட்பாரற்று கிடந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் போலீஸார் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பல்லடம் அருகே இருதரப்பினரிடையே ஹான்ஸ் கேட்டது தொடர்பான ஏற்பட்ட மோதலில் 20-க்கும் மேற்பட்ட அவரைப் பிடித்து பல்லடம் போலீஸார் விசாரணை நடத்தி வரும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.