கோவை: கோவை மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் வாளையாறு சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கேரளாவில் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 5 நாட்களாக கோவை மாவட்டத்திலும் பரவலாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்தநிலையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் முக்கியமாக கேரளாவில் இருந்து கோவைக்கு வரக்கூடிய 13 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து கோவை வருவோர் கண்டிப்பாக கொரோனா பெருந்தொற்று பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தி அதற்கான சான்றிதழை வைத்து இருக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ் இல்லாமல் வருவோருக்கு சோதனைச் சாவடியிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நடைமுறை ஞாயிற்றுக் கிழமை முதல் அமலான நிலையில் கேரளாவில் இருந்து கோவை வருவோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஞாயிற்றுகிழமை மட்டும் கேரளாவில் இருந்து கோவை வந்த 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்கு மாதிரி கொடுத்தவர்கள் முடிவுகள் வரும் வரை வெளியே செல்ல அனுமதி இல்லை, அவர்களை சுகாதார ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
அத்தியாவசியத் தேவையின்றி கோவை வருவோரின் முகவரி விவரங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், திங்கட்கிழமை வாளையாறு சோதனைச் சாவடிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சமீரன், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் கொரோனா கட்டுப்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கொரோனா பரிசோதனை பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.