கோவை: விடுமுறை நாள் என்பதால், வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் முகக் கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியில்லாமல் நடமாடுவதால், கொரோனா பரவும் அச்சம் நிலவுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் சோலையார் அணை, கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை மற்றும் கண்ணுக்கு இனிமையாக பச்சைப் பசேலென்று தேயிலைத் தோட்டங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதைக் காண சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த சில காலங்களாக கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சுற்றுலாத் தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், சில நாட்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், சில தினங்களாக வால்பாறை பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. நேற்றும் இன்றும் சற்று மழை குறைந்து வெயில் காணப்படுவதால், ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால், வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
வால்பாறை பகுதி மற்றும் கூழாங்கல் ஆறு மற்றும் சோலையார் அணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வருகின்றனர். தனிநபர் இடைவெளி இல்லா மலும் முகக் கவசம் இல்லாமலும் அவர்கள் நடமாடுவதால், கொரோனா பரவும் அச்சம் நிலவுகிறது. மேலும், அவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து விளையாடி வருகின்றனர். வன பகுதியில் மழை பெய்தால், கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

இது தெரியாமல் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் அதிகரித்து வருகின்றனர்.
அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
வால்பாறை பகுதிக்கு வரும் வழியில் ஆழியார் பகுதியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைந்துள்ளது அங்கு வால்பாறைக்கு வரும் வாகனங்களை சோதனை செய்து அனுப்புவது வழக்கம்.

தற்போது வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் பெற்று அனுப்பாமல் வால்பாறை பகுதியில் செல்வதற்கு அனுமதிப்பதால், வால்பாறையில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
ஆழியார் சோதனைச்சாவடி நிலையத்தில் வனத் துறையினரும் காவல் துறையினரும் சுகாதாரத் துறையினரும் இணைந்து வால்பாறைக்கு வரும் மக்களின் வாகனங்களை நிறுத்தி, கொரோனா பரிசோதனை சான்றிதழ் உள்ளதா என்று பரிசோதனை செய்து அவர்களுடன் ஆதார் அட்டையை பதிவு செய்து வால்பாறைக்கு அனுப்புமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.