கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்து சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூர் அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மனோஜ்(23). இவர், பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் உள்ள நண்பரை சந்திக்க செல்வது வழக்கம். அப்போது நண்பரின் வீட்டின் அருகே வசிக்கும் 10-ஆம் வகுப்பு முடித்த, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில், கடந்த, 16-ஆம் தேதி சிறுமியைக் காணவில்லை என கூறி சிறுமியின் பெற்றோர், தாலுகா போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். மனோஜ் மொபைல் எண்ணை வைத்து சோதனை செய்தபோது சிங்காநல்லூரில் இருப்பது தெரிய வந்தது.
மேலும், சிறுமிக்கு ஆசை வார்த்தையைக் கூறி திருமணம் செய்ய மனோஜ் முயற்சித்தது தெரிய வந்தது. இதனையடுத்து, மனோஜை, தாலுகா போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.