பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

கோவை: பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், அணை நிரம்பி வழிவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


கோவை: பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், அணை நிரம்பி வழிவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே, காரமடை வனப்பகுதியில் பில்லுார் அணை அமைந்துள்ளது. அணையின் நீர்மட்டம், 100 அடி. பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில், சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

இதனால், பில்லுார் அணைக்கு வினாடிக்கு, 3,000 கன அடியிலிருந்து, அதிகபட்சமாக, 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நேற்று முன்தினம் இரவு, பில்லுார் அணை நீர்மட்டம் 86.75 அடியாக இருந்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, 97 அடியை எட்டி அணை நிரம்பி வழிந்தது. ஒரே நாளில் அணையில், 10 அடிக்கு தண்ணீர் உயர்ந்து உள்ளது. அணை நிரம்பியதால், உபரி நீர் நான்கு மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரம் குடியிருக்கும் மக்கள், பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி. 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது.

மேலும், பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வருவதால், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று, 90 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 21.5 டி.எம்.சி.,யாக உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...