கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கீ.சு.சமீரன் பொறுப்பேற்பு!

கோவை: கோவை மாவட்ட புதிய ஆட்சியராக கீ.சு.சமீரன் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னால் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அதற்கான பொறுப்பு ஆவணங்களை சமீரனிடம் வழங்கினார்.



கோவை: கோவை மாவட்ட புதிய ஆட்சியராக கீ.சு.சமீரன் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். முன்னால் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அதற்கான பொறுப்பு ஆவணங்களை சமீரனிடம் வழங்கினார்.



அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்தில் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தொற்று விகிதத்தை தரை மட்டத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.



கடந்த மாதம் 4 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த தொற்று முதலமைச்சரின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 1500 என்ற எண்ணிக்கையில் வந்துள்ளது. இதற்கு கோவை பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கி உள்ளனர்.

மேலும், பொதுமக்களிடமிருந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். தற்பொழுது ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்துள்ள நிலையில், கூடிய விரைவில் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்க்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...