கோவை: மேட்டுப்பாளையம் அருகே தாயனூரில் கிணற்றில் விழுந்த கன்றுககுட்டியை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே தாயனூரில் கிணற்றில் விழுந்த கன்றுககுட்டியை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
மேட்டுப்பாளையம் அருகே காளம்பாளையம் ஊராட்சி தாயனூர் பகுதியை சேர்ந்தவர் காரையா. இவர் தனது தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த சுமார் ஒன்றரை வயதுள்ள ஆண் கன்றுக்குட்டி அருகே உள்ள கிணற்றில் விழுந்துள்ளது.
கன்றுக்குட்டியின் சப்தம் கேட்டு அங்கு வந்த காரையா கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான வீரர்கள் கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.