கோவை: கொரனாவை கட்டுபடுத்துவதே தனது முதன்மையான பணி என கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.
கோவை: கொரனாவை கட்டுபடுத்துவதே தனது முதன்மையான பணி என கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டது. கோவை மாநகராட்சி ஆனையராக இருந்த குமாரவேல் பாண்டியன் வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யபட்டதுடன் புதிய கோவை மாநகராட்சியின் ஆணையராக ராஜகோபால் சுங்கரா நியமிக்கபட்டார்.
கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக ராஜகோபால் சுங்கராவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியைத் தொடங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ராஜகோபால் சுங்கரா, “கோவை மாநகரில் தனது முதன்மை பணியாக கொரனாவை கட்டுப்படுத்துவதுதான்.
இரண்டாவதாக பொது மற்றும் வழங்கல், மூன்றவதாக மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன். இரண்டாம் அலை பரவல் இருக்கும் நிலையில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன்.
கோவை மாநகரில் அரசு அனுமதியில்லாமல் செயல்படும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை கண்காணிக்க ஏற்கனவே மண்டலங்கள் வாரியாக குழுக்கள் நியமிக்கபட்டுள்ளது.
அனுமதியில்லாமல் கடைகள் செயல்படுவது கண்டறியபட்டால் அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சென்னை மாநகராட்சியில் உள்ளது போல கொரனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமை படுத்தபட்டுள்ளவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்க அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தனிமைபடுத்தபட்ட பகுதிகள் ஆராயப்படும்,” என தெரிவித்தார்.
முன்னதாக முன்னாள் ஆனையராக இருந்த குமாரவேல் பாண்டியனை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ஆலோசனையில் ஈடுபட்டார்.