மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலி: தமிழக கேரளா எல்லையில் தீவிர வாகன சோதனை!

கோவை: வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தமிழக கேரளா எல்லையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.


கோவை: வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தமிழக கேரளா எல்லையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.



கேரள எல்லையான வயநாடு பகுதியில் கேரள தண்டர்போல்ட் போலீசாருக்கும் மாவோயிஸ்ட்டுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் கூடலூர், பந்தலூர் தாலுகா நுழையாமல் தடுக்க கூடலூர் அருகே உள்ள தமிழக-கேரள எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், கூடலூர் நாடுகாணி, பாட்டவயல் சோலார் உட்பட 11 சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, நியூ ஹோப், தேவாலா, நிலக்கோட்டை, தேவர்சோலை, சேரம்பாடி, மசினகுடி என அனைத்து போலீஸ் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

மேலும், எல்லையில் உள்ள மருத்துவமனைகளில் குண்டு காயங்களுடன் யாராவது அனுமதிக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று எல்லையில் இருக்கும் கிராமங்களில் குண்டு காயங்களுடன் யாராவது வந்தார்களா என்பது குறித்தும் வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அத்துடன் சந்தேகத்திற்கு இடமாக யாராவது நடமாடுகிறார்கள் என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...