கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம், பி.என்.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம் ஏற்பட்டது.

இரண்டு தளங்களைக் கொண்ட இந்த குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. நேற்று பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் குடோனை பூட்டி சென்ற நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி, கட்டிடத்திலிருந்து கரும்புகை வெளியேறியது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணபதி உத்தரவின் பேரில், கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி தலைமையில், தொண்டாமுத்தூர், பீளமேடு, கோவை வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களுடன் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.



இரண்டு தளங்களிலும் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் கடும் வெப்பம் நிலவியது. பாதுகாப்பு கவசங்கள் அணிந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் நுரையை பயன்படுத்தி சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும், தீ அருகில் இருந்த மாவு ஆலை பகுதியிலும் பரவிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு அங்கும் தீயை அணைத்தனர்.

குடோனுக்கு அருகில் ஏராளமான குடியிருப்புகள் இருந்ததால், தீயை விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் மற்ற கட்டிடங்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினரும் கவுண்டம்பாளையம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சேத மதிப்பு உடனடியாக கணக்கிடப்படவில்லை என்றாலும், லட்சக்கணக்கில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...