கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆதியூரில் வசிக்கக்கூடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் காங்கேயம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதற்காக இன்று அதிகாலை சரக்கு ஆட்டோவில் புறப்பட்டனர். அந்த ஆட்டோ பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு கல்லாங்காடு புதூரில் உறவினர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ கோவையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த ஆட்டோ கிணத்துக்கடவு பகுதியில் சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியதில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.