காதல் ஜோடிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம்; பெற்றோர் மிரட்டுவதாக புகார்

கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் சமூக சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தேனியைச் சேர்ந்த காதல் ஜோடிகள், காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். மேலும், மணமகனின் பெற்றோர் மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்தனர்.



கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் சமூக சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தேனியைச் சேர்ந்த காதல் ஜோடிகள், காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். மேலும், மணமகனின் பெற்றோர் மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்சக்தி (26), பிரியதர்ஷினி (23) காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், இதற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இன்று அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

மணமகளின் பெற்றோர்கள், அவர்கள் மகளை கடத்தி விட்டதாக, தேனியில் அளித்த புகாரின் பெயரில் நடத்திய விசாரணையில், இருவரும் கோவையில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, மணமகனின் பெற்றோரை பிடித்து வைத்து, மணமகளின் பெற்றோர்கள் மிரட்டுவதாக மணமகனுக்கு தெரியவந்துள்ளது.

அதை தொடர்ந்து, திருமணம் செய்தவுடன் இருவரும் நேராக, மாநகர போலீஸ் ஆணையரின் அலுவலகத்திற்கு வந்தனர். தம்பதிகள், அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், பெண்வீட்டார் விடுத்த மிரட்டலை குறித்தும் மனு அளித்தனர். புகாரை பெற்று கொண்ட ஆணையர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...