கோவை உக்கடம் பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை: கோவை உக்கடம் பகுதியில் ரூபாய் 95 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்ட காய்கறி மார்கெட்டை, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று மாலை துவக்கி வைத்தார்.



கோவை: கோவை உக்கடம் பகுதியில் ரூபாய் 95 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்ட காய்கறி மார்கெட்டை, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று மாலை துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர், "மாநகராட்சியால் நவீனமயமாக்கபட்ட இந்த காய்கறி மார்கெட் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். தற்போது, கொரோனா நோய் தொற்று அபாயம் உள்ளதால், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்", என்று அறிவுத்தினார்.



மேலும், பேசுகையில், உக்கடம் பகுதியில் தினசரி மார்கெட் அமைக்க, பொது மக்கள் தொடர் கோரிக்கை வைத்ததாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த மார்கெட்டில் 303 கடைகள் அமைக்கபட்டு உள்ளது, என்று தெரிவித்தார்.



"நவீனமயமாகப்பட்ட, இந்த மார்கெட் மூலம் மக்கள் மற்றும் வியாபாரிகள் பயன் பெறுவார்கள். உக்கடம் காய்கறி மார்கெட்டை, போலவே கிணத்துக்கடவு பகுதியிலும் திறக்கபட்டு உள்ளதாக", அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தமிழக முதல்வர் அனைத்து மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த அவர், நாளை மறுதினம் முதல்வர் விமானம் மூலம் கோவை வந்து, இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியில், கோவை மாவட்டதிற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு உள்ளதாக கூறிய உள்ளாட்சித்துறை அமைச்சர், அவினாசி சாலையில் மிக பெரிய பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்கபட உள்ளதாக தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் அகலப்படுத்தபட்டு, விபத்துக்கள் குறைக்கபட்டு உள்ளதாக, தெரிவித்த அவர், பொள்ளாச்சி சாலையில் அமைக்கபட்டுள்ள பாலம் வழியாக, கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு 20 நிமிடங்களில் சென்றடைய முடியும், என்றார்.

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து பேசுகையில், "விரிவாக்க பணிகள் மூலம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்கபடும் போது இன்னும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும்", என்று தெரிவித்தார்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...