கோவையில் போலீஸ்காரரின் தாயாரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்!

கோவை: கோவையில் போலீஸ்காரரின் தாயாரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் போலீஸ்காரரின் தாயாரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகம் பி.ஆர்.எஸில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அங்கு நேற்று முன்தினம் மாலையில் இராஜேந்திரனின் தாயார் கனகம் (70), நடை பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, பின்னால் வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர போலீஸ் ஆணையரிடம் டிரைவராக பணிபுரிந்து வரும் ஆயுதப்படை போலீஸ்காரரின் 70 வயது தாயாரிடம் மர்ம ஆசாமி ஒருவர் 10 பவுன் நகையை பறித்து விட்டு தப்பினார். 24 மணி நேரமும் பாதுகாப்பில் உள்ள போலீஸ் குடியிருப்பில் நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...