கோவையில் இருவேறு சாலை விபத்துகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பலி..!

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று மாலை இரு வேறு சாலை விபத்துகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக இறந்தனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று மாலை இரு வேறு சாலை விபத்துகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக இறந்தனர். 

கோவை அருகே உள்ள சிறுமுகை, போகலூர் பகுதியில் வசிப்பவர் பொன்னுச்சாமி (63) இவர் விவசாயக் கூலியாக உள்ளார். நேற்று மாலை, மோட்டார்சைக்கிளில் உரம் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்த போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு போகபூர் பிரிவு அருகே, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

அக்கம்பக்கத்தினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

அதேபோல, மற்றொரு சாலை விபத்தில், கோவை அருகே உள்ள அன்னூர் மன்னீஸ்வரர் தருமர் கோயில் தெரு பகுதியில் வசிப்பவர்டேவிட் (40) நேற்று நண்பர்களைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அன்னூர் சாலையில் எதிரே வந்த கார் அவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அங்குள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், டேவிட் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

விபத்து குறித்து, அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...