இயந்திர கோளாறு காரணமாக காரில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து; பெட்ரோல் பங்க் ஊழியர்களின் துரித நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்ப்பு..!

கோவை: கோவை அவிநாசி சாலை குப்புசாமி நாயுடு மருத்துவமனை சிக்னல் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு நேற்று இரவு 11:30 மணியளவில் தனியார் டாக்ஸி வாகனம் ஒன்று டீசல் அடிக்க வந்துள்ளது. பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தியபோது, காரின் முன்புறம் புகை வெளிவந்ததால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் டீசல் அடிக்காமல் காரை பெட்ரோல் பங்கில் இருந்து எடுத்து செல்லும் படி ஓட்டுனரிடம் கூறியுள்ளனர்.

கோவை: கோவை அவிநாசி சாலை குப்புசாமி நாயுடு மருத்துவமனை சிக்னல் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு நேற்று இரவு 11:30 மணியளவில் தனியார் டாக்ஸி வாகனம் ஒன்று டீசல் அடிக்க வந்துள்ளது. பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தியபோது, காரின் முன்புறம் புகை வெளிவந்ததால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் டீசல் அடிக்காமல் காரை பெட்ரோல் பங்கில் இருந்து எடுத்து செல்லும் படி ஓட்டுனரிடம் கூறியுள்ளனர்.



அதனையடுத்து, பெட்ரோல் பங்கை விட்டு சிறிது தூரம் தள்ளி காரை நிறுத்தி விட்டு காரின் ஓட்டுநர் காரின் முன்புறம் , உள்ள பேனட்டை திறந்து பார்த்த போது தீ பொறி வெளிவந்து மளமளவென எறிய துவங்கியது. 



இதனை கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பங்கில் இருக்கும் தீயணைப்பு சாதனங்களை கொண்டு, தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீ கட்டுப்பாட்டிற்கு வராமல் அதிகமானதால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர்.



தீ விபத்து காரணமாக, அந்த வழியாக வந்த வாகனங்களை சாலை காவல்துறையினர் வேற்று பாதை வழியாக திருப்பி விட்டனர். காரை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அழகர் என்பதும் கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் தற்பொழுது குடியிருப்பதும் தெரியவந்தது

மேலும் காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...