கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்; 18 இடங்கள் அபாயகரமானவை என அறிவிப்பு

கோவை: வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதால், கோவையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஆய்வில்,18 இடங்கள் அபாயகரமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது, என தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதால், கோவையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஆய்வில்,18 இடங்கள் அபாயகரமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது, என தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவையை பொறுத்தவரை இன்னும் பருவமழை துவங்கவில்லை. அடுத்த சில நாட்களில் பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பனிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை கலெக்டர் பதவி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் தலைமையில், அந்தந்த தாலுக்காக்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இது தவிர, தாழ்வான பகுதிகள், மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ள இடங்கள், அபாயகரமான பகுதிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

இதன்படி, மேட்டுப்பாளையத்தில் 11 இடங்களும், ஆனைமலையில் ஒரு இடமும், வால்பாறையில் 3 இடமும், பேரூர் பகுதியில் 3 இடங்களும் என 18 இடங்கள் அபயகரமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும், வெள்ள நீர் வீடுகளில் புகுந்தால், அவர்களை தங்க வைக்க 31 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தாலுகாவிலும் மழைசேத விவரங்களை உடனுக்குடன் அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்க, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மழையால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க முன்னெற்பாடு பணிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன, என அவர் தெரிவித்தார்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...