கோவையில் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவன்; சிறையில் அடைப்பு

கோவை: கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருபவர் விஜயசங்கர். இவருக்கு, ரஞ்சிதா (25) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.



கோவை: கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருபவர் விஜயசங்கர். இவருக்கு, ரஞ்சிதா (25) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு விஜயசங்கர் குடித்துவிட்டு வந்து ரஞ்சிதாவிடம் தகராறு செய்து உள்ளார். இதனால், மனவேதனை அடைந்த ரஞ்சிதா கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்த உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை கிடைக்க பெற அங்கு பபணியாற்றி வந்துள்ளார்.

சம்பவத்தன்று, இரவு ரஞ்சிதா தங்கியிருந்த வீட்டிற்கு வந்த விஜயசங்கர், தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதற்கு ரஞ்சிதா மறுக்கவே, கொலை செய்யும் நோக்கத்துடன் வந்திருந்தவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சிதாவை குத்திவிட்டு, அங்கு இருந்து தப்பி உள்ளார்.

ரஞ்சிதாவை அருகில் வசிப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து உள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல்துறையினர் விஜய்சங்கர் மீது வழக்குபதிவு செய்தனர். அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு, நேற்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...