பாஜகவில் சாதாரண உறுப்பினரும் உயர் பதவிக்கு வரமுடியும் - வானதி சீனிவாசன், தேசிய மகளிர் அணி தலைவர்.

பாஜகவில் சாதாரண உறுப்பினரும் உயர் பதவிக்கு வரமுடியும் - வானதி சீனிவாசன், தேசிய மகளிர் அணி தலைவர்.

கோவை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்த வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய தலைவராக அண்மையில் அறிவிக்கப்பட்டார்.

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இந்தப் பதவியை வகிப்பது இதுதான் முதல்முறை. இந்நிலையில், இன்று கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்த வானதி சீனிவாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அவருக்கு ஆளுயர மாலையும்,மலர் கிரீடமும் அணிவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் அவருக்கு வேல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

இதன் பின்னர், தொண்டர்கள் இடையே உரையாற்றிய வானதி சீனிவாசன், சாதாரண தொண்டரும் உயர் பதவியை அடையலாம் என்பது பாரதிய ஜனதா கட்சியில் மட்டுமே முடியும் எனவும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் பெண்களுக்கு பல சலுகைகளும், முன்னேற்றத்திற்கான பாதையும் அமைத்து தரப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.

கட்சியின் வளர்ச்சிக்கு மகளிர் அணியின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வட மாநில கட்சி குறிப்பிட்ட சமுதாயத்தின் கட்சி என்று விமர்சிக்கப்படும் நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஹிந்தி பேசத் தெரியாத எனக்கு இந்த பதவி தரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.



மேலும், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எம்பி மற்றும் எம்.எல் யாரும் இல்லை என்ற போதும், தமிழகத்தை சேர்ந்த ஒருவரை மகளிர் அணி தலைவராக அறிவித்திருப்பது தமிழகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சி வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதி செய்துள்ளது, என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து, வரும் 2021 சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள்

வெல்வார்கள், எனவும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் இதற்கு மகளிரணியினர் 100% உறுதுணையாக இருப்போம், என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் தமிழகத்தின் எல்லா கட்சிக்கும் அவர்களுக்கு நிகழ்ச்சியை அறிவிப்பதில் உரிமையிருக்கிறது, எனவும் வேல் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது, அந்த யாத்திரையை கண்டு அவர்களின் பயத்தையே காட்டுகிறது என்றார்.

இன்றைய நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரான, பேராசிரியர் கனகசபாபதி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, மாநில பொருளாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு, வானதி சீனிவாசன் வாழ்த்தினர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...