கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு..! மகள் உயிரிழப்பை அறிந்து தாய் மாரடைப்பால் மரணம்!

கோவை: கோவையில் மகள் உயிரிழப்பை அறிந்து தாய் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் மகள் உயிரிழப்பை அறிந்து தாய் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சண்முகம்-பிரேமகுமாரி. இத்தம்பதியினர் தனது மகள் அனுராதா, மருமகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், வீட்டில் பூச்சி தொல்லை காரணமாக நேற்று பூச்சி மருந்து அடித்து உள்ளனர். மருந்தின் நெடி காற்றில் பரவிய நிலையில், அதனை சுவாசித்ததால் சண்முகத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். 

இதேபோல், அனுராதாவிற்கும் சுவாச கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அழைத்துச் சென்று உள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். 

அனுராதா மரணமடைந்த சம்பவம் குறித்து அவரது தாய் பிரேமகுமாரியிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மரணம் அடைந்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...