கோவை மதுக்கரை அருகே மனைவியுடன் தகாத உறவு இருந்தாக சந்தேகத்தின் பேரில் உறவினரை கத்தியால் குத்திய நபர் கைது!

கோவை: கோவை மதுக்கரை அருகே மனைவியுடன் தகாத உறவு இருந்தாக சந்தேகத்தின் பேரில் உறவினரை கத்தியால் குத்திய நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை மதுக்கரை அருகே மனைவியுடன் தகாத உறவு இருந்தாக சந்தேகத்தின் பேரில் உறவினரை கத்தியால் குத்திய நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மதுக்கரை அறிவொளிநகர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (35). தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆம்புலென்ஸ் டிரைவராக பணி செய்து வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீனா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் வசித்து வரும் காளிதாஸின் அத்தை மகனான ராகேஷ் (29) ஈச்சனாரி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பரவைசராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், பிரவீனாவிற்கும் ராகேஷுக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு ராகேஷ் பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் அறிவொளி நகர் வந்துள்ளார். அப்போது, வீட்டிற்கு செல்லும் வழியில் காத்திருந்த காளிதாஸ் ராகேஷை தடுத்து நிறுத்தி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராகேஷின் முதுகு பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் ராகேஷை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், ராகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த மதுக்கரை போலீசார், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காளிதாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...