தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்!

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து தென்மாவட்டங்களான தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து தென்மாவட்டங்களான தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

கோவையில் இருந்து சென்னை, மயிலாடுதுறை மற்றும் கேரள மாநிலம் எர்ணாக்குளம், திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழித்தடத்தில் 10க்கும் மேற்பட்ட பண்டிகைக் காலச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நவம்பர் 14ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்குச் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, கோவை மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் ஜமீல் அஹமது கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்க்கும் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகமானோர், தீபாவளியை தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாடச் செல்வார்கள்.

ஆகவே, இந்தாண்டு தீபாவளிக்கு கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் வழித்தடம் மற்றும் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, மடத்துக்குளம், உடுமலை, பழனி, மதுரை வழித்தடத்தில் முன்பதிவில்லாத, சிறப்பு விரைவு ரயில் இயக்க வேண்டும்.

தீபாவளிக்கு 10 நாள்கள் முன்பே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால், வெளியூர் செல்வோர்களுக்கு வசதியாக இருக்கும். அதேபோல், பண்டிகை முடிந்து 15 நாள்கள் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால், தொழிலாளர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி வந்து பணிகளைத் தொடரவும் எளிதாக இருக்கும்,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...