பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 19ம் தேதி வரை பிளஸ்2 பொதுத் தேர்வு நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 19ம் தேதி வரை பிளஸ்2 பொதுத் தேர்வு நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை, தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, ஆதி திராவிட நலப்பள்ளி, சுயநிதிபள்ளி, நகராட்சி பள்ளி, மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 71 மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள், என மொத்தம் 4692 பேர் தேர்வு எழுதினர். 

அதற்கான தேர்வு முடிவு, கடந்த ஜூலை மாதம் 16ம் தேதியன்று வெளியானது. இதில் 4431 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் கல்லூரியில் விணப்பிக்க ஏதுவாக, அப்போது மதிப்பெண் சான்றிதழ் நகல் மட்டும் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளி கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று முதல், கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழக்கும் பணி துவங்கப்பட்டது. 

அந்தந்த பள்ளிகளில் படித்த மாணவர்கள், நேரடியாக சென்று, தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கி வருகின்றனர். இன்னும், சில நாட்களில், அனைத்து மாணவர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழக்கும் பணி நிறைவு செய்யபடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...