பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் (சிஐடியு) சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.அதன்படி கோவையில் சிவானந்தா காலனியில் போராட்டம் நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு முழுவதும் மண்டல அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, கோவை டாடாபாத் பகுதியில் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் (சிஐடியு) சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

23 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், இஎஸ்ஐ (ESI) ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.



போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனத்தின் (சிஐடியு) பொதுச்செயலாளர் திருச்செல்வன், டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை புதிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.



காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தால் ஊழியர்களின் பணிச்சுமை மற்றும் வேலைப் பளு கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், அசுத்தமான காலி பாட்டில்களை ஊழியர்களே கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தத் திட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு காண்பதாக துறை அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்திருந்த நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாகியும் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அமைச்சரின் சமீபத்திய கருத்துகள் குறித்தும் விமர்சித்த அவர், ஊழியர்களை ஒருமையில் பேசியும், திருடர்கள் போல் சித்தரித்தும் பேசுவது அமைச்சரின் பதவிக்குப் பொருத்தமல்ல என்றார். கடை ஊழியர்களின் உண்மையான பிரச்சினைகளை அறிந்து கொள்ள அரசு தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலும், வரவிருக்கும் மாநில பட்ஜெட்டிலும் டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் தொடர்பாக முதலமைச்சரும் துறை அமைச்சரும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். பட்ஜெட்டுக்குப் பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...