கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சாட்சிகளை விசாரித்த நீதிபதி வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு!

நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சாட்சிகளை விசாரித்த நீதிபதி வழக்கை வரும் மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சாட்சிகளை விசாரித்த நீதிபதி வழக்கை வரும் மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சாமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேரும் ஆஜராயினர்.

அப்போது, மருத்துவர் வாசன், அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி, சிசிடிவி காட்சிகள் ஆய்வாளர் ராஜூ மற்றும் ஆய்வாளர் சதாம் உசேன் ஆகியோர் சாட்சியளித்தனர்.

அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி சாட்சி அளித்த போது, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான இறந்த கனகராஜ், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக கூறினார். இதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஆனந்த் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என கூறி, கனகராஜின் இறப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இது குறித்து நீதிபதி பி.வடமலை, அனுபவ ரவியிடம் விளக்கம் கேட்ட போது, தான் தவறுதலாக கூறி விட்டதாக கூறினார். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை இம்மாதம் 16-ம் தேதிக்கு நீதிபதி பி.வடமலை ஒத்திவைத்தார்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...