கேரளா அரசு போல் தமிழக அரசும் நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் - பொள்ளாச்சி நெல் விவசாயிகள் கோரிக்கை

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதியில் 3 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் கடந்த ஜூன் மாதம் முதல் போக நெல் நடவு செய்யப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதியில் 3 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் கடந்த ஜூன் மாதம் முதல் போக நெல் நடவு செய்யப்பட்டது.

நடவு செய்யபட்டு 4 மாதங்களுக்குப் பிறகு, இந்த மாதம் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த சன்னரக நெல் குவிண்டால் ரூ.1950க்கும், மோட்டா ரகம் ரூ.1918 என விலை நிர்ணயித்து நேற்று முதல் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது.



இதனால், ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் கொண்டு வந்து, கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நெல்லுக்கான ஆதார விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் ஒரு குவிண்டால் நெலுக்கு ரூ.2600 வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று, தமிழகத்திலும் ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று பொள்ளாச்சி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், உரிய நேரத்தில், ஆனைமலையில் நெல் கொள்முதல் மையம் தொடங்கப்பட்டது, மகிழ்ச்சி அளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...