நீலகிரி: பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் பல பரிசுகள் காத்திருப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி மின்னஞ்சல் மூலமாக அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அதை யாரும் பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா கடந்த 4 ஆண்டுகாலமாக பதவி வகித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் இல்லா நீலகிரி, சுகாதாரம், அனைவருக்கும் கல்வி என பல திட்டங்களை மாவட்டத்தில் அமல்படுத்தி மக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல பரிசுகளை வழங்க உள்ளது. எனவே, அதை கிளிக் செய்து பல பரிசுகளை வெல்லுங்கள், இப்படிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா என்ற பெயரில் போலி மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்க பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தன்னுடைய பெயரில் பிரபல நிறுவனத்தில் பரிசுத் தொகை மற்றும் பரிசுப் பொருட்களை பெற அனைவரும் கிளிக் செய்யுங்கள் என மின்னஞ்சல் மூலம் சில மர்ம நபர்களால் அனுப்பப்பட்டு வருகிறது. எனவே, அவ்வாறு வரும் மின்னஞ்சல்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த மாவட்ட ஆட்சியர், இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.
மேலும், வடகிழக்கு பருவமழையின் போது குன்னூர் காேத்தகிரி பகுதியில் பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் இதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.