சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்; பொள்ளாச்சி ஆழியாரில் மக்கள் கூட்டமாக கூடுவதால் நோய் பரவும் அபாயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக வருவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக வருவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ளது, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை, குரங்கு அருவி, டாப்சிலிப் உள்ளிட்ட இடங்கள் ஆகும். இதில் குறிப்பாக ஆழியார் அணை, குரங்கு அருவி, உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வருவது வழக்கம். 

கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு காரணமாக சுற்றுலா தடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதன் பிறகு செப்டம்பர் மாதம் முதல் சுற்றுலாத்தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து ஆழியார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.  

இருப்பினும், பாதுகாப்பு கருதி ஆழியார் அணை, பூங்கா மற்றும் குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுவதில்லை. 

இந்நிலையில், விடுமுறை நாளான இன்று ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள், முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சகஜமாக சுற்றித் திரிந்தனர். ஆழியார்  தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக குளித்து வருகின்றனர்.

 

நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரானோ அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் இந்த அலட்சியப் போக்கால், நோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொது மக்களுக்கு கடுமையான அபராதம் விதித்து, நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...