பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக வருவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ளது, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை, குரங்கு அருவி, டாப்சிலிப் உள்ளிட்ட இடங்கள் ஆகும். இதில் குறிப்பாக ஆழியார் அணை, குரங்கு அருவி, உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வருவது வழக்கம்.
கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு காரணமாக சுற்றுலா தடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதன் பிறகு செப்டம்பர் மாதம் முதல் சுற்றுலாத்தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து ஆழியார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இருப்பினும், பாதுகாப்பு கருதி ஆழியார் அணை, பூங்கா மற்றும் குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுவதில்லை.
இந்நிலையில், விடுமுறை நாளான இன்று ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள், முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சகஜமாக சுற்றித் திரிந்தனர். ஆழியார் தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக குளித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரானோ அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் இந்த அலட்சியப் போக்கால், நோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொது மக்களுக்கு கடுமையான அபராதம் விதித்து, நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.