பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு: தமிழகத்தில் யாருக்கும் பதவி இல்லை

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் பதவி கொடுக்கப்படவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.



பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் பதவி கொடுக்கப்படவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது. 



பாஜக வின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற எட்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஜே.பி நட்டா இன்று கட்சியின் துணைத் தலைவர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள், தேசியச் செயலாளர், தேசிய செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார்.

அதில் பல மாநிலங்களை சேர்ந்த 12 தேசிய துணை தலைவர்களும், 8 செயலாளர்களும், மற்றும் இதர பொறுப்புகலுக்கான நபர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. பாஜக வின் தேசியச் செயலாளர் பதவியில் இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஹெச். ராஜா தற்போது அந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

தமிழகத்தில் தன் பலத்தை அதிகரிக்க முயற்சித்து வரும் பாஜக, இம்மாநிலத்தில் இருந்து ஒருவரை கூட தேசிய நிர்வாகிகளாக நியமிக்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு அமைச்சரவைக்கு பரிசீலிக்கப்படலாம், என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாஜக இளைஞர் அணி தலைவராக கர்நாடகாவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். 

நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு, பிரதம மந்திரி மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...