பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு!

கோவை: பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.



பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக, தமிழக அரசு சார்பில் 172 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாதாள சாக்கடை பணிகளை ஒப்பந்ததாரர்கள், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில், நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனுவில், 'பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கப்படாமல், ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் விரைந்து முடிக்க நடவடிக்கை வேண்டும், நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் சாக்கடைகளை தூர்வாரி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், உடுமலை ரோடு டீச்சர்ஸ் காலனி எதிரில் உள்ள இந்துக்களின் மயானத்தில் மின் விளக்குகள் மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், நகர்ப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொள்ளாச்சி மரப்பேட்டையில் உள்ள நூலகத்தை சிறந்த முறையில் பராமரித்து, பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படுமாறு வசதி செய்து தரவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...