கோவை ஆனைமலையில் புதிய விவசாய மசோதாவை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கைது!

கோவை: மத்திய அரசின் புதிய விவசாய மசோதாவை எதிர்த்து ஆனைமலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் இன்று ஸ்டேட் பேங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: மத்திய அரசின் புதிய விவசாய மசோதாவை எதிர்த்து ஆனைமலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் இன்று ஸ்டேட் பேங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த பரமசிவம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசின் விவசாய மசோதாவை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.



பின்னர், ஆனைமலை சேத்துமடை ரோடு ஸ்டேட் பேங்க் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தை சேர்ந்த 15 பேரை ஆனைமலை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து அடைத்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு மேல் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...