கோவை: பொள்ளாச்சி அருகே வீட்டில் சிலர் கஞ்சா செடி வளர்த்தி விற்பனை செய்து வருவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை: பொள்ளாச்சி அருகே வீட்டில் சிலர் கஞ்சா செடி வளர்த்தி விற்பனை செய்து வருவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோட்டூர் அருகே உள்ள தென்சங்கம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார், இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், தென்சங்கம்பாளையம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் ஐயப்பன் (25), மற்றும் சந்தோஷ் (22), ஆகியோரது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், ஐயப்பன் வீட்டிலிருந்து, போலீசார் இரண்டு கஞ்சா செடிகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், சந்தோஷ் வீட்டிலிருந்து கஞ்சா செடிகள் மற்றும் 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் இருவரும் கஞ்சா செடி வீட்டில் வளர்த்தி சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த கோட்டூர் போலீசார், வழக்கு பதிவு செய்து, பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றம் 2ல் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.