திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து பொள்ளாச்சியில், ஆலோசனை கூட்டம்; அரசுக்கு பரிந்துரை செய்ய அதிகாரிகள் முடிவு.

கோவை: பிஏபி பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையின் மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கோவை: பிஏபி பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையின் மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 



தென்மேற்கு பருவமழையால் இந்தாண்டு பிஏபி தொகுப்பு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

இதையடுத்து, பரம்பிக்குளம் அணையிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு, தண்ணீர் திறக்கப்பட்டதால் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம், தற்போது 39.41 அடியாக உள்ளது. 

இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள பிஏபி திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பு பொறியாளர், முத்துசாமி தலைமையில் பிஏபி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி, நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தின் கீழ், 2-ம் மண்டல பாசனத்துக்கு வரும் 28 -ம் தேதி முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு, 8700 மில்லியன் கன அடி தண்ணீரை நான்கரை சுற்றுக்கு விட அரசுக்கு பரிந்துரை செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதனால், 95 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, நிலக்கடலை, மக்காசோளம், சின்னவெங்காயம், பந்தல் காய்கறிகள் பயிரிட முடியும் என்பதால், அதற்கான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

இதை, ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் தண்ணீர் திறப்பு குறித்த பரிந்துரையை அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...