கோவை: கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு உதவி கள இயக்குநர் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையை உள்ளடக்கிய பகுதிகளாக ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ளது. வால்பாறை பொள்ளாச்சி, மானாம்பள்ளி, டாப்சிலிப் என 4 வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வனத்தை காப்பது, வன விலங்குகளை காப்பது மற்றும் மனித வன உயிரின மோதலை தடுப்பது போன்ற பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வால்பாறை அட்டகட்டி பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்ட உதவி கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில் அடர்ந்த வனப்பகுதிகளில் பணியாற்றும் வன ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு கேடயமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும், அவர்களின் பணி தொய்வின்றி நடைபெற புதிய சீருடைகள், காலணிகள், தொப்பிகள் வழங்கப்பட்டன. மேலும் பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் சார்பில் வன ஊழியர்களுக்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் மதிப்புடைய மழை கோட்டுகள் வழங்கப்பட்டது.

பின்னர் விழாவில் உதவி கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் பேசுகையில், ஒவ்வொரு வன ஊழியர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை சிறப்பாக செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் நம்முடைய ஆனைமலை புலிகள் காப்பகம் மிகச்சிறந்தது என்று பெயரெடுக்க வேண்டும் என்றார். மேலும், நீங்கள் அனைவரும் முழுமையாக ஈடுபாட்டுடன் கடமையை செய்ய வேண்டும் எனவும் உங்களுடைய தேவையை அறிந்து செய்து தரப்படும் என்று கூறினார்.
இந்த விழாவில் பொள்ளாச்சி கோட்ட உதவி கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனச்சரகர்கள், வனவர்கள் மற்றும் லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் தர்மராஜ், ஸ்ரீனிவாசன், மோகன்குமார், கமலக்கண்ணன், அன்புச்செல்வன், எம்.மோகன் குமார் மற்றும் 300க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து விழாவில் கலந்து கொண்டனர்.