கோவையில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை..!

கோவை செட்டிபாளையம்- பல்லடம் சாலையில் உள்ள விக்னேஷ் பார்க் என்ற குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை.


கோவை: கோவையில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கபட்டு இருந்த நகை மற்றும் ₹40,000 ரூபாய் பணம் திருட்டுப்போன சம்பவம், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை செட்டிபாளையம்- பல்லடம் சாலையில் உள்ள விக்னேஷ் பார்க் என்ற குடியிருப்பு பகுதியில் ரவிக்குமார்- ஜெகதீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். ரவிக்குமார் தனியார் நிறுவனத்தில், நான்கு சக்கர வாகனம் அலைன்மெண்ட் பணி செய்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி, மயிலேரிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.

இந்த நிலையில், இன்று இருவரும் பணிக்கு சென்று விட்ட நிலையில், மாலை ஜெகதீஸ்வரி வீடு திரும்பிய போது, பூட்டிய வீட்டின் கதவு உடைக்கபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கபட்டு இருந்த எட்டு பவுன் நகை மற்றும் ₹40,000 ரூபாய் திருடபட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, பட்டபகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அங்கு வசிப்பவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...