சென்னை: சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய நிலையில், சிறந்த பேரூராட்சிக்கான மூன்றாம் பரிசு மதுக்கரைக்கு(கோவை) வழங்கப்பட்டது.

74வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். பின்னர், திறந்த ஜீப்பில் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீரர்களின் அணிவகுப்பு ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
அதில் வேலூர் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். அதேபோல, சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசை விழுப்புரம், இரண்டாவது கரூர், மூன்றாவது கூந்தலூர் நகராட்சிக்கு வழங்கப்பட்டது.
மேலும், சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு வனவாசி(சேலம்), இரண்டாம் பரிசு வீரபாண்டி(தேனி), மூன்றாம் பரிசு மதுக்கரை(கோவை) வழங்கப்பட்டது.