கோவை: டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், நேற்று ஒரே நாளில் கோவையில் ரூ.21 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது. இதேபோல், நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
இதனால் மதுபானங்களின் விற்பனை கோவையில் படு ஜோராக நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 297 மதுக்கடைகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, கோவை மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், "கோவை வடக்கில் மொத்தம் 259 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.11 கோடியே 83 ஆயிரத்துக்கு, மது விற்பனையானது. இதேபோல், கோவை தெற்கில் உள்ள 138 கடைகளில் ரூ.10 கோடியே 38 லட்சத்திற்கு மது விற்பனையாகியுள்ளது. ஆகவே, கோவை மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் ரூ.21 கோடியே 38 லட்சத்து 83 ஆயிரத்திற்கு மது விற்பனையானது."