தொடர் விடுமுறை எதிரொலி கோவையில் நேற்று ஒரே நாளில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை

கோவை: டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், நேற்று ஒரே நாளில் கோவையில் ரூ.21 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை: டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், நேற்று ஒரே நாளில் கோவையில் ரூ.21 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.



சுதந்திர தின விழாவினை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது. இதேபோல், நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். 

இதனால் மதுபானங்களின் விற்பனை கோவையில் படு ஜோராக நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 297 மதுக்கடைகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, கோவை மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், "கோவை வடக்கில் மொத்தம் 259 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.11 கோடியே 83 ஆயிரத்துக்கு, மது விற்பனையானது. இதேபோல், கோவை தெற்கில் உள்ள 138 கடைகளில் ரூ.10 கோடியே 38 லட்சத்திற்கு மது விற்பனையாகியுள்ளது. ஆகவே, கோவை மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் ரூ.21 கோடியே 38 லட்சத்து 83 ஆயிரத்திற்கு மது விற்பனையானது."

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...