கோவை: இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் அங்கோடா லொக்கா மரணம் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் தனித்தனியாக நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அங்கோடா லொக்கா மரணம் குறித்த வழக்கில் மூன்று பேரையும் கடந்த 12ம் தேதி சிபிசிஐடியினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க மூன்று நாட்கள் கேட்டிருந்தனர்.
அதன் பொருட்டு சிபிசிஐடியினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து இன்று மதியம் 2 மணிக்குள் மூன்று பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோவை தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீ குமார் உத்தரவிட்டார்.
அதன்படி, மூன்று பேரும் இன்று கோவை நீதிமன்றத்தில் 2 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதனிடையே, மேலும் மூன்று நாட்கள் சிபிசிஐடியினர் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு நீதிபதி அனுமதி அளிக்கவில்லை.
மேலும், மூன்று பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, தியானேஸ்வரனை பொள்ளாச்சி சிறையிலும், அமானி தான்ஜியை சென்னை புழல் சிறையிலும், சிவகாமசுந்தரியை கோவை மத்திய சிறையிலும் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதில் அமானி தான்ஜி இன்று கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நாளை சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இனி 15 நாட்கள் கழித்து சிறையில் இருந்த படியே காணொளி மூலம் மூன்று பேரிடமும் நீதிமன்றத்தில் இருந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.