ஆன்லைன்‌ முறையில் சிறை கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கும்‌ ஈஷா!

கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள் 18 மலைவாழ் மக்கள் வாழும் செட்டில்மெண்ட்கள் உள்ளது. வெள்ளி முடி, காடம்பாறை பூனாச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கோவை: கடந்த 28 ஆண்டுகளாக தமிழக சிறைச்சாலைகளில்‌ இலவச யோகா வகுப்புகளை நடத்தி வரும் ஈஷா யோகா மையமானது, கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த சூழலில்‌ சிறை கைதிகளின்‌ உடல்‌ மற்றும்‌ மனநலனை மேம்படுத்தும்‌ விதமாக ஆன்லைன்‌ முறையில்‌ அவர்களுக்கு பிரத்யேக யோகா வகுப்புகளை நடத்தி வருகிறது.



தமிழக சிறைத்‌ துறை உயர்‌ அதிகாரிகளின்‌ வேண்டுகோளை ஏற்று, சென்னை, வேலூர்‌, கடலூர், திருச்சி, சேலம்‌, மதுரை, பாளையங்கோட்டை

ஆகிய இடங்களில்‌ இருக்கும்‌ அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும்‌ இலவச ஆன்லைன்‌ யோகா வகுப்புகள்‌ ஜூலை 28-ம்‌ தேதி முதல்‌

நடத்தப்பட்டு வருகிறது.

ஈஷா நிறுவனர், ஜக்கி வாசுதேவ் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஈஷா யோகா ஆசிரியர்கள்‌ இவ்வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்‌.

இந்த யோக பயிற்சிகள்‌ மூலம், நோய்‌ எதிர்ப்பு சக்தியையும்,‌ நுரையீரல்‌ திறனையும்‌ மேம்படுத்துவதற்கும், உடலளவிலும்‌, மனதளவிலும்‌ அமைதியாகவும்‌, சமநிலையாகவும்‌ இருப்பதற்கும்‌ துணை புரிகிறது. மேலும்‌, மன அழுத்தத்தை குறைப்பதற்கும்‌ இப்பயிற்சிகள்‌ தீர்வாக இருக்கும்‌, என தெரிவித்துள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன்‌ தனித்‌ தனிக்‌ குழுக்களாக

இவ்வகுப்புகள்‌ நடத்தப்படுகின்றன. இதன் மூலம்‌, தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள ஆயிரக்கணக்கான ஆண்‌ மற்றும்‌ பெண்‌ கைதிகள்‌ பயன்பெற்று வருகின்றனர்‌. அத்துடன்‌ சிறை வார்டன்௧கள்‌ மற்றும்‌ பணியாளர்களும்‌ இவ்வகுப்பில்‌ பங்கேற்று பயன்‌ பெறுவதாக ஈஷா சார்பில் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...