பிரதமர் குறித்து அவதூராக பதிவிட்டவர் மீது வழக்கு, ஆனால், பெரியாரை அவதூறாக பேசியவர் மீது வழக்கு பதியாதது ஏன்..? அன்னூரில் மறியல்..!

கோவை: கோவை மாவட்டம், அன்னூரில் பிரதமர் மோடி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு வெளியிட்டதாக இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பெரியார் மீது அவதூறாக பதிவு செய்த இந்து அமைப்பை சேர்ந்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள், அன்னூர் காவல் நிலையம் அருகே இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம், அன்னூரில் பிரதமர் மோடி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு வெளியிட்டதாக இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பெரியார் மீது அவதூறாக பதிவு செய்த இந்து அமைப்பை சேர்ந்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள், அன்னூர் காவல் நிலையம் அருகே இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன், மூன்றாம் ஆண்டு சட்ட கல்லூரி மாணவர். சமீபத்தில், அவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் கந்த சஷ்டி கவசத்தை குறித்து அவதூராக பதிவிட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(a),295(a) மற்றும் 505(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பெரியாரை இழிவு படுத்தி முகநூலில் பதிவிட்ட அதே பகுதியைச் சேர்ந்த இந்து அமைப்பு நிர்வாகி, நந்தா என்பவர் மீதும் சரி சமமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரியார் அமைப்பினர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள் அன்னூர் காவல் நிலையம் முன் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...