அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற்றும் படிப்பகத்தை திமுக எம்.பி ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தனர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் பெரியார்-அம்பேத்கரின் சிந்தனைகள் குறித்து இருவரும் உரையாற்றினர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலைகள், படிப்பகத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் திரைப்பட நடிகர் சத்யராஜ் இன்று திறந்து வைத்தனர்.



இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவருக்கும் ஒரே இடத்தில் சிலைகள் அமைந்திருப்பது இக்கிராமத்தின் தனிச்சிறப்பு எனக் குறிப்பிட்டார். சட்ட ரீதியான சவால்களை கடந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றிய இப்பகுதி இளைஞர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றியவர் எனக் குறிப்பிட்ட அவர், அரசியலமைப்புச் சட்டத்தின் 340-வது பிரிவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆணையம் மற்றும் அதன் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரைகள் உயர்கல்வி மற்றும் அரசு பணிகளில் பலருக்கு வாய்ப்புகளை உருவாக்கியதாக தெரிவித்தார்.



மேலும், பெண்களின் சொத்துரிமை, விவாகரத்து உரிமை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய இந்து சட்டத் தொகுப்பு மசோதாவை நிறைவேற்ற அம்பேத்கர் மேற்கொண்ட முயற்சிகளை நினைவுகூர்ந்த அவர், இந்தியாவின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக அமைப்பை பாதுகாப்பதில் அவரது அரசியலமைப்புச் சிந்தனைகள் இன்றும் வழிகாட்டுவதாக கூறினார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், பெரியாரையும் அம்பேத்கரையும் தனித்தனி சமூகங்களின் தலைவர்களாக சித்தரித்து இருவருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக தெரிவித்தார். ஆனால், இருவரும் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கான தலைவர்கள் என்றும், சமூக நீதிக்கான இரு கண்கள் என்றும் அவர் கூறினார்.

பெரியார் மற்றும் அம்பேத்கரின் சிந்தனைகளை இளைஞர்கள், குறிப்பாக தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் படித்து அறிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், எதிர்காலத்தில் மாநிலத்தின் எந்தப் பகுதியில் பெரியார், அம்பேத்கர் சிலைகள் அமைக்கப்பட்டாலும் அதற்கான நிதி உதவியை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.



மேலும், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கும் தமிழகத்தில் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...