நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் மலைவாழ் மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பாரம்பரிய இசை, கரகாட்டம் மற்றும் பழங்குடியின நடன நிகழ்ச்சிகள் விழாவை சிறப்பித்தன.


கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராம மக்களின் குலதெய்வமான அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா சனிக்கிழமை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

புனரமைக்கப்பட்ட கோவிலில் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



விழாவில் சிறப்பு விருந்தினராக தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

நல்லூர்பதி கிராமத்திற்கு வருகை தந்த அவருக்கு மலைவாழ் மக்கள் தங்களது பாரம்பரிய இசைக் கருவிகளை முழக்கி, கரகாட்டம் மற்றும் பழங்குடியின பாரம்பரிய நடனங்களை நிகழ்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து தங்களது பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.



பின்னர், எஸ்.பி.வேலுமணி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுடன் கலந்துரையாடினார்.

Newsletter

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...

வேளாண் இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ சேர்க்கை: துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவின் 2026-27 பட்டப்படிப்பு மற்றும் பட்ட...

Coimbatore to Hold Rally on Settling Disputes Through Mediation

As part of the nationwide initiative, the District Mediation Centre will organise an awareness rally on September 9, to...

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...