கோவை: கோவை: கோவை உக்கடம் - ஆத்துபாலம் இடையே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை உக்கடம்-ஆத்துபாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், வாளையார் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இது தவிர குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது. இதனால் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதன் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு உக்கடம்-ஆத்துபாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி ஏப்ரல் மாதம் துவங்கியது. முதற்கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பாலப் பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 55 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டு சுமார் 45 தூண்கள் வரை பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் 15க்கும் மேற்பட்ட தூண்களில் ஓடுதளம் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனிடையே, கரும்புக்கடை முதல் ஆத்துபாலம் வரை இரண்டாம் மேம்பாலப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.265 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த உடன் இரண்டாம் கட்ட பணிகள் துவக்கப்பட உள்ளன.
அதேபோல, உக்கடம்-ஆத்துபாலம் மேம்பாலத்தில் வாகன ஒட்டிகள் வசதிக்காகவும், மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மூன்று இடங்களில் இறங்குதளங்கள் அமைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், உக்கடம் மேம்பாலத்தின் முதல் கட்ட பணிகள் ஓரளவு முடிந்துவிட்டன. கூடிய விரைவில் இரண்டாம் கட்ட பணிகள் துவங்கப்படும். இந்தாண்டு இறுதிக்குள் உக்கடம் மேம்பாலம் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம், என்று தெரிவித்தனர்.