கோவை: கோவையில் காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல் நிலையத்தில் சந்திக்க சென்ற உறவினரை இறந்த பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவையில் காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல் நிலையத்தில் சந்திக்க சென்ற உறவினரை இறந்த பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை பேரூர் ஆறுமுக கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(48) பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் ஐஸ்வர்யா (18) தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவரது வீட்டின் அருகில் வசிக்கும் ரித்தீஷ் மோட்டர் வைண்டிங் பணி செய்து வருகிறார். இவரும் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர இருவரையும் அழைத்துப் பேசி கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து, ஐஸ்வர்யா ரத்தீஸுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு ஐஸ்வர்யா வீட்டுக்குச் சென்ற ரிதீஸ் தன்னை காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்தியதால் ஐஸ்வர்யா வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.
மகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த சக்திவேலையும் கத்தியால் குத்திய ரதீஸ், உன்னால் தான் என் காதல் பறிபோனது என ஆத்திரத்துடன் என கூறியுள்ளார். படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரதீசை தேடி வந்த நிலையில், அவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு துணிகள் மற்றும் பிரட் வாங்கி வர சொல்லி காவலர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, ரித்தீஷின் உறவினர் துணி மற்றும் பிரட் வாங்கி கொண்டு காவல் நிலையம் சென்ற போது, அங்கிருந்த உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் ரித்தீஷின் உறவினரை தாக்கி உள்ளனர். காவல் நிலையம் முன்பு இருதரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
மேலும், ரித்தீஷை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் நிலையத்தில் இருந்து, பேரூர் காவல் நிலையத்திற்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.