கோவையில் காம்பிளான் பவுடரில் பல்லி..? உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளிக்க போவதாக பெற்றோர் தகவல்

கோவை: கோவையில் குழந்தைக்கு ஊட்டிய காம்பிளான் ஊட்டச் சத்து பவுடரில் பல்லியை கண்ட குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை: கோவை தெலுங்குபாளையம் டெக்ஸ்டூல் காலணி பகுதியில் வசித்து வரும் கார்த்திக்- சுகன்யா. தம்பதியினருக்கு, ரித்திக் விஜய் (7) சமந்தா ஸ்ரீ (2) என இரு குழந்தைகள் உள்ளனர்.

கார்த்திக் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மாதம் செல்வபுரம் பகுதியில் உள்ள அப்போலோ மருந்தகத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க காம்பிளான் பவுடர் வாங்கி உள்ளார்.

ஏற்கனவே, சிறிதளவு பால் பவுடர் இருந்த காரணத்தால், குழந்தைகளின் தாயார் நேற்று வாங்கிய புதிய காம்ப்ளான் பாக்கெட்டை திறந்து சிறுவன் ரித்திக் விஜய்க்கு கலந்து கொடுத்து உள்ளார்.



அந்த பானத்தை உண்ட சிறுவன், சிறு நேரத்தில் சோர்வுடன் காணப்பட்டு இருந்துள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மீண்டும் இன்று அதே காம்பிளான் பாக்கெட்டை திறந்த போது அதில் ஒரு பல்லி இருந்ததாக, குழந்தைகளின் தாய் சுகன்யா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

வேறு, எந்த குழந்தையும் பாதிக்கபட்டு விட கூடாது என்பதால் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக குழந்தையின் தாய் சுகன்யா தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...