கூடலூரில் சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம்: வனத்துறையினர் தீவிர விசாரணை

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள வேடன்வயல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கிய ஆண் யானை உயிரிழந்தது தொடர்பாக வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்காெண்டு வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள வேடன்வயல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கிய ஆண் யானை உயிரிழந்தது தொடர்பாக வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்காெண்டு வருகின்றனர்.

"கூடலூர் சுற்றியுள்ளப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால், சமீபகாலமாக யானைகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் மற்றும் காய்கறி செடிகளை நாசம் செய்வது அதிகரித்துள்ளது" என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகாமல் இருக்க பலமுறை வனத்துறையினர் முயற்சித்தும் எந்தவித பலனும் இல்லாத நிலை தான் நீடித்து வருகிறது, என கவலை தெரிவித்தனர்.



இந்த நிலையில், கூடலூர் அருகே வேடன்வயல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் யானை ஒன்று சிக்கிக்கொண்டுள்ளதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், வனத்துறையினர் வருவதற்குள் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

உணவை தேடி வரும் போது, அந்த யானை சேற்றில் சிக்கியதா? இல்லை காட்டு யானைகலுக்குள் சண்டை ஏற்பட்டு, தப்பி ஓடி வரும் போது தவறி சேற்றில் சிக்கி இருக்குமோ? என்ற கோணத்தில் கூடலூர் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...