கோவை: சுந்தராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலை மீது காவி வண்ணம் பூசி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை மீது இன்று மர்ம நபர்கள் காவி சாயம் பூசியுள்ளனர். இதைத்தொடர்ந்து, தகவலறிந்து வந்த பெரியாரியல் ஆதரவாளர்கள் காவி சாயம் பூசிய மர்ம நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.
இந்த நிலையில், தந்தை பெரியாரின் சிலை மீது காவி வண்ணம் பூசி அவமதித்திருப்பதற்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினகரன் தனது ட்விட்டர் பதிவில், மறைந்த தலைவர்களை அவமதிப்பதன்மூலம் சமூக அமைதி சீர்குலைய யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.