கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசியதற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

கோவை: சுந்தராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலை மீது காவி வண்ணம் பூசி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை: சுந்தராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலை மீது காவி வண்ணம் பூசி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை மீது இன்று மர்ம நபர்கள் காவி சாயம் பூசியுள்ளனர். இதைத்தொடர்ந்து, தகவலறிந்து வந்த பெரியாரியல் ஆதரவாளர்கள் காவி சாயம் பூசிய மர்ம நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

இந்த நிலையில், தந்தை பெரியாரின்‌ சிலை மீது காவி வண்ணம்‌ பூசி அவமதித்திருப்பதற்கு கடும்‌ கண்டனத்திற்குரியது என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தினகரன் தனது ட்விட்டர் பதிவில், மறைந்த தலைவர்களை அவமதிப்பதன்மூலம்‌ சமூக அமைதி சீர்குலைய யார்‌ காரணமாக இருந்தாலும்‌ அவர்கள்‌ மீது காவல்துறையினர்‌ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. அண்மைக்காலமாக அதிகரித்து வரும்‌ இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்‌ என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...